search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுஷ்மான் பாரத் திட்டம்"

    ஆயுஷ்மான் திட்டத்தால் சுமார் 50 கோடி ஏழை மக்கள் பலனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Modi #AyushmanBharat
    ராஞ்சி:

    இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. 

    இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். 
     
    உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று ஜார்க்கண்ட் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் நான் நிறைவேற்றி உள்ளேன். இன்று துவங்கப்பட்டுள்ள கனவுத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் கிடைத்துள்ளது.



    சிலர் இந்த திட்டத்தை மோடிகேர் என அழைக்கிறார்கள். சிலர் ஏழைகளுக்கான திட்டம் என அழைக்கிறார்கள். இந்த திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏழைகளுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது தான் ஆயுஷ்மான் பாரத். 

    கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஈடாக இந்த திட்டத்தால் பலனடைபவர்கள் எண்ணிக்கை உள்ளது.  

    முந்தைய அரசுகள் வெறும் வாக்கு வங்கி அரசியலை கடைப்பிடித்து மட்டுமே ஆட்சிக்கு வந்தது. ஆனால், எங்கள் அரசு உடல் நலம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த திட்டத்தால் சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர். நாட்டின் ஏழைகளுக்காக சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். #Modi #AyushmanBharat
    ×